தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), தூத்துக்குடி சமூக மேம்பாட்டு திட்டம் (CDP) – TOUCH, உன்னத் பாரத் அபியான் மற்றும் ஆங்கிலத் துறை இணைந்து (20.09.2025) அன்று தூத்துக்குடி இனிகோ நகரில் பிளாஸ்டிக் எதிர்ப்பு பேரணியை நடத்தியது.

பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தூய்மையான பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இப்பேரணியில் மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். பலகைகள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வை கல்லூரி செயலாளர் அ.செ. டாக்டர் எஸ். குலந்தை தெரசா, முதல்வர் அ.செ. டாக்டர் ஜெஸ்சி பெர்னாண்டோ, துணைமுதல்வர் அ.செ. டாக்டர் எம். எஸ். எளிலரசி, மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் டாக்டர் பி. செரீனா மார்கரெட் ஆகியோர் வழிகாட்டுதலின் கீழ் நடத்தினர்.

சமூக மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர்களான டாக்டர் எம். ஹெர்மினா மற்றும் திருமதி ஜே. மெல்பா ஷேரன் ஆகியோர் திட்டமிட்டு பேரணியை முன்னெடுத்தனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய இப்பேரணி பொதுமக்களிடையே சிறப்புப் பாராட்டைப் பெற்றது.