தூத்துக்குடி அருள்மிகு தெப்பக்குளம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் 31-வது ஆண்டு புஷ்பாஞ்சலி விழா செவ்வாய்க்கிழமை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
விழாவையொட்டி காலை 7 மணிக்கு ஸ்ரீ மாரியம்மனுக்கு புஷ்ப பாவாடை அலங்காரம் செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை 7 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு நவகன்னிகா பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புஷ்பாஞ்சலி சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் திருமாங்கல்ய பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த புஷ்பாஞ்சலி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு அருளாசி பெற்றனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.