தூத்துக்குடி மாவட்டத்தில் மோக்ஸி பவர் ஜெனரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் (CSR) ஒரு பகுதியாக, அதானி பவுண்டேஷன் மூலம் ரூ.60 லட்சம் மதிப்பிலான பல்வேறு சமூக நலத் திட்டங்கள் செவ்வாய்க்கிழமை (04.08.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டன.



முதற்கட்டமாக, அ. குமாரபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் ரூ.4.50 லட்சம் மதிப்பில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, குழந்தைகளுக்குத் தேவையான மேசை, நாற்காலி உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மருதூர் கிராமத்தில் உள்ள குளம் ரூ.25 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு, நீர்வள மேம்பாட்டிற்காக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது.



மேலும், தரவை குளத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சேமிப்பு தொட்டி அமைக்கப்பட்டதுடன், ஏ.எம்.பட்டி கம்மாயிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணியும் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.



இந்த அனைத்து திட்டங்களும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஜெயந்தி நந்தா மற்றும் ருத்ர நாராயண ஆகியோர் கலந்து கொண்டு திட்டங்களை திறந்து வைத்தனர். அதானி பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் பிரிடி லாரன்ஸ் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்தார்.



இந்தத் திட்டங்கள் கிராம மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு, குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளதாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.