முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், டாக்டர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.



இதையொட்டி, தூத்துக்குடி மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட கட்டபொம்மன் நகர் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு பிரையன்ட் நகர் பகுதி திமுக செயலாளரும், 45-வது வார்டு திமுக கவுன்சிலரும், மாநகராட்சி நகரமைப்புக் குழுத் தலைவருமான ராமகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



நிகழ்வில், 49-வது வார்டு திமுக வட்ட செயலாளர் மூக்கையா மற்றும் 50-வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், கழக உடன்பிறப்புகள், திமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.