முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.



வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



அண்ணாநகரில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்துடன் அமைதி ஊர்வலம் புறப்பட்டது. நான்காம் கேட், புதிய பேருந்து நிலையம் வழியாக எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை ஊர்வலம் சென்றடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் சிலைக்கும், அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பொருளாளர் அனந்தையா, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மாவட்ட அணி நிர்வாகிகள் அந்தோணிஸ்டாலின், கவிதாதேவி, பிரபு, அந்தோணி கண்ணன், நாகராஜன், அருணாதேவி, நிக்கோலாஸ்மணி, தங்கம், ராமர், அருண்குமார், பழனி, நிக்கோலாஸ் மணி, ஜான்சன், செல்வி ஆகியோரும் பங்கேற்றனர். பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிதங்கம், கோட்டுராஜா, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், சேர்மபாண்டி, செல்வகுமார், ராஜ்குமார், மீனாட்சி சுந்தரம், மாநில பேச்சாளர் சரத்பாலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.



மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன்ஜேக்கப், ஆனந்தசேகர், முருகஇசக்கி, சாரதி, பால்ராஜ், டைகர் வினோத், செல்வின், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், வினோத், நைஸ் பரமசிவம், சாகுல்ஹமீது, பிக் அப் தனபால், நாராயணவடிவு, சக்திவேல், செந்தில்குமார், ரவி, இந்திரா, வினோத், சத்யா, கருப்பசாமி, செய்யதுகாசிம், பெல்லா ஆகியோரும் பங்கேற்றனர். மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்திரபோஸ், ரெக்ஸின், பவானி ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், பொன்னப்பன், விஜயகுமார், சரவணக்குமார், வைதேகி, ஜான்சிராணி, தெய்வேந்திரன், கந்தசாமி, ஜான், நாகேஸ்வரி, கண்ணன், பேபி ஏஞ்சலின், பாப்பாத்தி, மரியகீதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.



வக்கீல்கள் மோகன்தாஸ் சாமுவேல், ஆனந்த கபிரியேல்ராஜ், நாகராஜன் பாபு, ரூபராஜா மற்றும் தொமுச நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, பெத்துராஜ், வேல்முருகன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பகுதி பொருளாளர் முத்துராஜா, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, கதிரேசன், ராஜாமணி, சுப்பையா, முனியசாமி, ரவீந்திரன், செல்வராஜ், மூக்கையா, சதீஷ்குமார், பொன்ராஜ், கருப்பசாமி, சுரேஷ், செந்தில்குமார், சிங்கராஜ், டென்சிங், பொன்னுச்சாமி, பத்மாவதி, பொன்பெருமாள், சேகர், சக்கரைசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.



பகுதி அணி அமைப்பாளர்கள் காசிராஜன், ஆனந்தி, செல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் பாலு, இசக்கிமுத்து, பெரியசாமி, பிச்சையா, செந்தில்குமார், முருகன், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், செந்தில்குமார், லிங்கராஜா, வட்டப்பிரதிநிதிகள் அருணகிரி, பாஸ்கர், புஷ்பராஜ், செல்வம், பால்துரை, கார்த்திகேயன் மற்றும் முரளிதரன், நாராயணன், சின்னக்காளை, சிவசுந்தர், மணி உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



மேலும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் கலைஞர் கருணாநிதியின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு, திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி நடைபெற்ற இந்த அமைதி ஊர்வலம் மற்றும் மரியாதை நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று கலைஞரின் நினைவைப் போற்றினர்.