ஆசிரியர் தினத்தையொட்டி வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன், ஆசிரியர்களுக்கு வீடியோ மூலம் சிறப்பு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.



அந்த வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:



“ஒரு மெழுகுவர்த்தியின் மூலம் மற்றொரு மெழுகுவர்த்தியை ஏற்றும்போது, முதல் மெழு குவர்த்தியின் ஒளி ஒருபோதும் குறைவதில்லை. அதுபோலவே, ஆசிரியர்கள் தாங்கள் கற்ற அறிவுச் செல்வத்தை மாணவர்களுக்கு வழங்கு வதாலும், அவர்களிடம் அறிவை ஊட்டுவதாலும் ஆசிரியர்களின் அறிவு குறைவதில்லை. மாறாக, அந்த அறிவின் ஒளி தலைமுறை தலைமுறையாகப் பரவி வருகிறது.



மாணவர்களின் அறிவை வளர்த்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தருபவர்கள் ஆசிரியர்களே. ஒவ்வொரு மாணவரின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆசிரியரின் அர்ப்பணிப்பும், உழைப்பும், வழிகாட்டுதலும் நிச்சயம் இருக்கும்.



சமுதாயத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தனது வீடியோ வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.