தூத்துக்குடி சுதந்திரப் போராட்டத் தியாகியும், செக்கிழுத்த செம்மலுமான வ.உ. சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ. சிதம்பரனார் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, குபேர் இளம்பரிதி, அந்தோணிக்கண்ணன், பழனி, அருண்குமார், அருணாதேவி, சோமநாதன், சேசையா, பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், செல்வக்குமார், மாநகர அணி நிர்வாகிகள் முருகஇசக்கி, ஜெயக்கனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், சாகுல்ஹமீது, செந்தில்குமார், பிக் அப் தனபால், சந்தனமாரி, ரூபராஜா, ரவி ஆகியோரும் பங்கேற்றனர்.
வட்டச் செயலாளர்கள் கதிரேசன், பொன்ராஜ், சுப்பையா, பாலகுருசாமி, டென்சிங், மூக்கையா, செந்தில்குமார், செல்வராஜ், கங்காராஜேஷ், சதீஷ்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பொன்னப்பன், தெய்வேந்திரன், மரியகீதா, நாகேஸ்வரி, ராஜேந்திரன், பேபி ஏஞ்சலின், பகுதி அணி அமைப்பாளர்கள் குமார், ஆனந்தி, வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், ரஜின்முருகன் மற்றும் மணி முரளிதரன், ராஜன் நாராயணன், பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வ.உ. சிதம்பரனார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.