முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மாப்பிள்ளையூரணியில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உத்தரவின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கிழக்கு ஒன்றிய தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பால்துரை தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி, வீரவணக்க கோஷம் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பிலோமின்ராஜ், ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், முன்னாள் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் கணேசன், வசந்தகுமாரி, ஜெயராஜ், சந்தன்ராஜ், சுதாகர், தர்மலிங்கம், சந்தனராஜ், ஆசைத்தம்பி, பொன்ராஜ், ராஜேந்திரன், கிராஸ் கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், கிளைச் செயலாளர்கள் சண்முகத்தாய், பொன்னுச்சாமி, ஆனந்தராஜ், காசி, உலகநாதன், அன்பு, ஜான்சன் மகாராஜா, திருமணி, முருகன், கதிர்வேல், ராமர், பாண்டி, மாரிமுத்து, பென்சீகர், தென்னரசு இம்மானுவேல், சேசுராஜா, சக்தி, மகளிர் அணி நிர்வாகிகள் ரூபி, ஜெசிந்தா, கிங்ஸ்லின், ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் ஆம்ஸ்ட்ராங், மாரிச்செல்வம், கிங்ஸ்டன், சிவசந்திரன், சிவா, பாலா, பாண்டி, ஒன்றிய இளைஞரணி இளம் பேச்சாளர் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினர்.