தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60வது வார்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக, சங்கர் காலணி பகுதியில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் நோக்கில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த மேயர், அப்பகுதி மக்களிடம் நேரடியாக குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். குடிநீர் விநியோகம் மேலும் சீராக நடைபெற தேவையான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கினார்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், "மக்கள் பிரதிநிதிகளின் கடமை, அரசின் நலத்திட்டங்கள் எந்தவித பாரபட்சமும் இன்றி அனைவருக்கும் சமமாக சென்றடைவதை உறுதி செய்வதாகும். அதற்காக தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.
திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களை தொடர்ந்து ஆய்வு செய்து, எந்தவித குறைபாடுகளும் ஏற்படாத வகையில் ஒப்பந்ததாரர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் போது பொதுமக்கள் தங்களது தேவைகளையும், பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையிலான ஆலோசனைகளையும் தெரிவிக்கின்றனர்.
அவற்றையும் கருத்தில் கொண்டு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களும், அவற்றின் செயல்பாடுகளும் தரமாகவும், முழுமையாகவும் அமைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும்," என்றார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி கவுன்சிலர் சந்திரபோஸ், வட்டச் செயலாளர் ரவீந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.