தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கிகள் மூலம் கடன் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அடையாள அட்டை பெற்று, வங்கி மூலம் கடன் பெற்ற பெண் ஒருவர் கூறியதாவது:
“முத்துநகர் கடற்கரையில் நான் பானி பூரி கடை நடத்தி வருகிறேன். இந்தத் தொழிலை நம்பித்தான் எனது குடும்பத் தையும், எனது இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வருகிறேன். எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது மகள் தற்போது பி.டெக். படித்து வருகிறார். எனது மகன் மெரைன் கல்லூரியில் படித்துள்ளார்.
எனது குழந்தைகளின் உயர்கல்விக்கு உதவியாக இருந்தது மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிதான். பல இடங்களில் கடன் கேட்டேன். வங்கிகளுக்குச் சென்றபோதும், முதலில் தொழில் செய்து வருவதை நிரூபித்த பிறகுதான் கடன் வழங்க முடியும் என்று கூறினர்.
அப்போது மேயர் ஜெகன் பெரியசாமியிடம் முத்துநகர் கடற்கரையில் சாலையோர கடை நடத்த அனுமதி கேட்டேன். அவர் எனக்கு அனுமதி வழங்கினார். அந்த வாய்ப்புதான் இன்று எனது வாழ்வாதாரத்தை உயர்த்தி யுள்ளது.
நான் மட்டுமல்ல, எனது குடும்பமும், எனது இரண்டு குழந்தைகளும் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி அளித்த உதவியும், ஊக்கமும் முக்கிய காரணம். அவர் செய்த உதவியை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்போம். அவருக்கு எப்போதும் ஆதரவாகவும், விசுவாசமாகவும் இருப்போம்” என்று அந்த பெண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.