கரூர் மாவட்டத்தில் 26.09.2025 அன்று நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் “இரண்டாம் ஜாலியன் வாலாபாத் படுகொலை” எனக் குறிப்பிடப்பட்டு, சம்பவத்துக்குக் காரணமான அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
சீட்டா நிறுவனரும், அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மேன் பி. பாபு @ லஞ்ச ஒழிப்பு பாபு எழுதிய கடிதத்தில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறை நிர்வாகம், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் நிர்வாகம், மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு இன்னும் வழக்கு பதிவு செய்யாததும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காததும், பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசின் மீது நம்பிக்கை குறைவடையச் செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்துக்குப் பின் ஒரு நபர் விசாரணை ஆணையம் மட்டுமே அமைக்கப்பட்டிருப்பதையும், அதிலும் முன்னர் ஆளும் கட்சியின் மக்கள் பிரதிநிதியாக இருந்த நபர் தான் ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பது விசாரணையை அரசு திட்டமிட்டு இருட்டடிக்கப் போவதாக மக்கள் சந்தேகம் கொள்கின்றனர் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, சமூக வலைதளங்களில் இந்த படுகொலை குறித்து கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த தமிழக அரசின் நடவடிக்கையை “மக்களின் உரிமையை அடக்கும் செயல்” எனவும் பாபு கடிதத்தில் கண்டித்துள்ளார்.
எனவே, முதல் கட்டமாக சம்பவத்துக்குக் காரணமான அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இரண்டாம் கட்டமாக கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், உரிய சட்ட நெறிமுறைகளுடன் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு வழிகாட்டு உத்தரவு வழங்குமாறு உயர்நீதிமன்றம் மதுரை கிளையிடம் பி. பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு, தமிழக அரசின் நிர்வாகத் திறன் மற்றும் மக்களிடையே நீதி குறித்த நம்பிக்கை மீண்டும் நிலை நிறுத்தப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி
கரூரில் நடந்த “இரண்டாம் ஜாலியன் வாலாபாத் படுகொலை” – அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு, கைது செய்ய வேண்டும் : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாபு மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி லயன்ஸ்டவுன் பகுதியில் 55 மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரப் பிரச்சினை – ஆட்சியரிடம் மனு!!
அடுத்த
கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுக பூத் பாகம் முகவர்களுக்கு வெற்றிக்கான வழிகாட்டல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026