ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யனடைப்பு ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் கூட்டம் நடத்துவதற்கான கட்டிடம் இல்லாது இருந்த நிலையில், மக்கள் சந்திப்பு நேரத்தில் மகளிர் குழு உறுப்பினர்கள் கட்டிடத்திற்குரிய தேவையை எம்எல்ஏ சண்முகையாவிடம் நேரடியாக கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று, உடனடியாக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மகளிர் குழுக்கள் பயன்படுத்தக் கூடிய புதிய கட்டிடம் கட்டித் தருவேன் என எம்எல்ஏ சண்முகையா உறுதியளித்தார். கொடுத்த சொல்லை காப்பாற்றி, குறித்த கட்டிடம் கடந்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
தற்போது இந்த புதிய கட்டிடத்தில் அய்யனடைப்பு ஊராட்சி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஆரி ஒர்க் பயிற்சி பெற்று வருகின்றனர். மகளிரின் தொழில் மேம்பாடு, வருமான உயர்வு ஆகியவற்றிற்கு துணையாக இக்கட்டிடம் முக்கிய பங்காற்றுகிறது.
மகளிரின் வளர்ச்சியை மனதார ஆதரித்து கட்டிடம் வழங்கிய எம்எல்ஏ சண்முகையாவுக்கு நன்றிகளைத் தெரிவித்து, “எம்எல்ஏ கொடுத்த நம்பிக்கைக்கும், செயலுக்கும் எந்நிலையிலும் ஆதரவாக இருப்போம்” என அய்யனடைப்பு ஊராட்சி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
“சொன்னால் செய்கிறார் சண்முகையா எம்எல்ஏ” – அய்யனடைப்பில் மகளிர்க்கு கனவு கட்டிடம், இன்று திறன் வளர்ப்பு மையம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கார்த்திகை பவுர்ணமியில் ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா யாகம் — பக்தர்கள் தரிசனத்தில் பெருஉற்சாகம்!!
அடுத்த
“தீபம் ஏற்ற தடை – திருப்பரங்குன்றம் மலையில் அரசியல் சூடு உச்சம்!”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026