“ஆதாரங்கள் முக்கியம்… அலட்சியம் வேண்டாம்… எளிதான செயல்களைச் செய்யவே ஏனோ கடினம்…” என சமூக பொறுப்புணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றியுள்ளார் கலையும் கல்வியும் சார்ந்த விழிப்புணர்வு பேச்சாளர் டாக்டர் சகா.
இன்று (28.11.2025) அவர் தொடர்ந்து பேசுகையில், தங்களுடைய ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களை நகல் எடுத்து ஒரு புத்தகமாக தொகுத்து வைத்துக்கொள்வது குடும்பத்திற்கும் நபருக்கும் மிகப் பெரிய பாதுகாப்பு எனவும் வலியுறுத்தினார்.
“ஒரு சின்ன அலட்சியம் சில நேரங்களில் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். எந்த ஆவணத்தையும் தேவைப்படும் நேரத்தில் உடனடியாக காணாமல் தவிக்கும் பிரச்சினைகள் அதிகம். அதனால் அடிப்படை ஆவணங்களை ஒழுங்காக ஒரு கோப்பிலோ புத்தகமாகவோ வைத்துக்கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், “செயல் எளிது… பழக்கம் எளிதல்ல. ஆனால் ஒழுங்கைப் பின்பற்றத் தொடங்கினால் வாழ்க்கை எளிதாகிவிடும்” என்று கூறி, ஒழுங்கும் ஆதாரமும் தனிநபர் முன்னேற்றத்திற்கான அடிப்படைக் கல்லென அவர் விளக்கினார்.
தூத்துக்குடி
“ஆதாரத்தின் அவசியம் – முக்கிய ஆவணங்களை தொகுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என டாக்டர் சகா வலியுறுத்தல்”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பி & டி காலனி 15-வது தெருவில் மழைநீர் பாதிப்புகள் – அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி முத்தையாபுரம் பொன்னாண்டி நகரில் மழைநீர் நிலைமையை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026