தூத்துக்குடியில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மாநில மாநாடு இரண்டு தினங்கள் நடைபெற்றது. மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட பெண்கள் இணைப்பு குழு உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.


மாநாட்டிற்கு வருகை தந்த எழுத்தாளர் வளர்மதி அவர்களுக்கு நினைவு பரிசோதனை பெண்கள் இணைப்பு குழு தலைவி ஷீலு வழங்கினார். மாநாட்டில் தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் சாமு. காந்தி அவர்களுக்கு சமத்துவத்திற்கான விருதினை மாநில பெண்கள் இணைப்பு குழு தலைவி ஷீலு அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் இருந்து சுமார் 500 பெண்கள் அமைப்பினர் கலந்து கொண்டார்கள். மாநாட்டில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 2026 ம் சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரிடமும் எந்த ஒரு அன்பளிப்பும் கை மாற்றும் பெற மாட்டோம் என்று உறுதி கூறினார்கள்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் அனைத்து உணவுகளும் சிறு தானிய உணவுகளாக வழங்கப்படும் என்று உறுதிமொழி எடுத்தார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து கிராம சபை கூட்டத்திலும் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவினுடைய உறுப்பினர்கள் கலந்து கொண்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கும் கஞ்சா புகையிலை போன்ற பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்கள்.

பெண்கள் திருமணத்தின் போது அவர்களுக்கு பணம் அன்பளிப்பு எதுவும் வழங்கப்படாது என்றும் அதற்கு பதிலாக நிலங்கள் பெண்கள் பேரில் கிரயமாக எழுதி கொடுக்கப்படும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். கிராமந்தோறும் பெண் விவசாயிகள் குழு அமைத்து கிராமத்தில் கலப்படம் இல்லாமல் கெமிக்கல் இல்லாமல் விவசாயம் உற்பத்தி செய்யப்படும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

பெண்களும் ஆண்களும் சமமாக சமத்துவடன் நடத்தப்படும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். தமிழ்நாடு அரசு அனைத்து கிராமங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் சுத்தமான சுகாதாரமான கலப்படம் இல்லாத கெமிக்கல் இல்லாத அரிசி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். தமிழ்நாட்டில் பெண் விவசாயிகளுக்கு என்று தனியாக விவசாய பண்ணைகள் அமைத்து ஒரு பெண் விவசாயிக்கு இரண்டு ஏக்கர் என்ற அடிப்படையில் அரசு விவசாய நிலங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள மேய்ச்சல் தரை நிலம் புஞ்சை தரிசு ஆணாதீனம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்களில் பெண் விவசாயிகளுக்கு அந்த நிலங்களை பிரித்து வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான உப்பு இலகாவிற்கு சொந்தமான நிலங்களை அங்கு உப்புத் தொழில் செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

கடற்கரை பகுதியில் வாழும் மீன் தொழிலாளர்களுக்கு மீன் கருவாடு உலர் வைப்பதற்கு கடற்கரை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களை மீனவர் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் சீரான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும் தாமிரபரணி நதிநீரை சுத்தமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள் நியாயமான போராட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டு தூய்மை பணியாளர்களை அரசு பணியில் பணியமர்த்த வேண்டும் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 23 ஆயிரம் ஊதியத்தை வழங்க வேண்டும் அரசு அவர்களை தனியாருக்கு வேலைக்கு அனுப்பக் கூடாது சென்னையில் உள்ள தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் அரசு நிரந்தர பணியாளராக பணியமர்த்த தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பாக அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாநில தலைவர் ஷீலு அவர்களுக்கு விழா குழுவினர் சார்பாக சமத்துவத்திற்கான விருதினை திருமதி பொன்னுத்தாய் அருள் செல்வி மேரி மற்றும் கன்னியாகுமரி பொறுப்பாளர்கள் மற்றும்  பல்வேறு பொறுப்பாளர்கள் இணைந்து வழங்கினார்கள்.