தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு தற்போது கழிவு செய்யப்பட்ட 40 வாகனங்களுக்கு வரும் நவம்பர் 11, 2025 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த ஏலத்தில் மொத்தம் 26 இருசக்கர வாகனங்கள் மற்றும் 14 நான்கு சக்கர வாகனங்கள் இடம்பெறுகின்றன. வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் ஏலம் விடப்படவுள்ளன.
ஏலத்தில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் நவம்பர் 7 முதல் 10 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காவல் அலுவலக மைதானத்தில் வாகனங்களை நேரில் பார்வையிடலாம்.
ஏலத்தில் பங்கேற்க நவம்பர் 10க்குள் ரூ.2000 முன்பணமாக செலுத்தி பெயரை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். ஏலத்தில் பங்கேற்று வாகனத்தை எடுக்காதவர்கள் முன்பணம் திரும்பப் பெறலாம்.
ஏலத்தில் வாகனத்தை பெற்றவர்கள், அதற்குண்டான ஜிஎஸ்டி வரி — நான்கு சக்கர வாகனங்களுக்கு 18%, இருசக்கர வாகனங்களுக்கு 12% — மற்றும் ஏலம் பெற்ற தொகையையும் சேர்த்து அதே நாளில் அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு 0461-2310351 அல்லது 98437 71441 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் 40 கழிவு வாகனங்கள் – நவம்பர் 11 அன்று பொது ஏலம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ — கொசு ஒழிப்பு பணிகளில் துரித நடவடிக்கை!
அடுத்த
மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு – “திமுக ஆட்சியே அடிப்படை பணிகளின் பொற்காலம்”!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026