தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அக்டோபர் 16ஆம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் சிறப்பாக அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவு அஞ்சலி மரியாதை செலுத்துமாறு, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் தேசிய செயலாளர் மற்றும் மாநில பொருளாளர் ஸ்ரீவை சுரேஷ் தேவர் அவர்களுக்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
நினைவு தின நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் தேசபக்தி, தியாகம், வீரச்செயல்கள் குறித்து உரைகள், நினைவு அஞ்சலி நிகழ்வுகள், இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இவ்வழைப்பிதழ் வழங்கும் நிகழ்வில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தங்கள் ஒத்துழைப்பை வழங்கினர்.
தூத்துக்குடி
வீரத்தை வணங்கும் விழா – வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்துக்கு அழைப்பிதழ் வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாத்திமாநகர் பங்கு பெருவிழா – ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி சிறப்பாக நடைபெற்றது!!
அடுத்த
“சிறந்த சேவைக்கு சிறப்பான பாராட்டு” — குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் காவல்துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டு!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026