17.12.2025 புதன்கிழமை நேற்று மாலை 7.40 மணி முதல் இரவு 9.50 மணி வரை, பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மகாஜன சங்கம் (ADMS) மஹாலில் புரட்சி பாரதம் கட்சியின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவர், K.V.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பூவை எம்.ஜெகன் மூர்த்தியார் அவர்களின் ஆணைக்கிணங்க, பொதுச் செயலாளர் D.ருசேந்திர குமார் தலைமையில், மாநில செயலாளர் பரணி P.மாரி முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி, அமைப்பை வலுப்படுத்துதல், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து மாநில நிர்வாகிகள் விரிவாக கருத்துரை வழங்கினர். இதில் மாநில துணைச் செயலாளர்கள் கோபிநாத், முருகேசன், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட மண்டல அணி, ஒன்றிய, நகர, கிளை, வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் மா.மாரிச்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.இந்திரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மு.மணிகண்டன், தூத்துக்குடி மாநகர் 53வது வார்டு வட்டச் செயலாளர் ந.முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்படிக்கு,
செய்தி பிரிவு
புரட்சி பாரதம் கட்சி
தூத்துக்குடி மாநகர் மாவட்டம்
தொடர்புக்கு : 93633 17545
தூத்துக்குடி
பாளையங்கோட்டையில் புரட்சி பாரதம் கட்சியின் 4 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – கட்சி வளர்ச்சி குறித்து விரிவான ஆலோசனை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வேம்பாரில் ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ நிகழ்வு – ஜி.வி. மார்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்பு!!
அடுத்த
“மதுவிலக்கு அமலாக்கத்தில் தீவிர கண்காணிப்பு – தூத்துக்குடியில் எஸ்.பி. திடீர் ஆய்வு”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026