தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரியில் 25 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தமிழ்நாடு வனத்துறை, வனச்சரகம் சார்பில் 5025 மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் மற்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, வனச்சரக அலுவலர் பாபு, நாட்டு நல பணித்திட்டம் ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன், கல்லூரி முதல்வர் முருகானந்தம், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் செல்வி, பேராசிரியர்கள் சேதுராமன், பவானி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், கிளைச் செயலாளர்கள் ஸ்ரீனிவாசகம், ரகு, பெருமாள், இளைஞரணி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம் பருவக்குடி–வேம்பார்–சித்தவநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் மரக்கன்றுகள் நடும் பணிகளையும் G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், கிளை செயலாளர்கள் விஜயகுமார், வேதமணி, ஊராட்சி செயலர் பானு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
G.V.மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் 5025 மரக்கன்றுகள் நடும் பசுமை இயக்கம் தொடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி.சண்முகையா தலைமையில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்!!
அடுத்த
“திருமண்டல தேர்தலில் வரம்பு மீறிய அதிகார துஷ்பிரயோகம் – இறுதியில் கடவுளே நம்பிக்கை” – டி.எஸ்.எப் முன்னாள் லே செயலர் கிப்ட்ஸன் குற்றச்சாட்டு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026