தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இணைந்து நடத்தும் மினி மாரத்தான் போட்டி (30.08.2025) சனிக்கிழமை காலை நடைபெற்றது போட்டிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவர்களுக்கு கல்லூரி முதல்வர் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் முதல்வர். முனைவர் அருட். சகோரி ரூபா மற்றும் கல்லூரியின் மேன்மையாளர் முனைவர் அருட் சகோதரி பாத்திமா லூயிஸ், துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.டி மதுரவல்லி தலைமை தாங்கினர்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பிற துறையினர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் காவல்துறையினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இப்போட்டியானது பெல் ஹோட்டலில் இருந்து முத்து நகர் விளக்கு வரை நடைபெற்றது. நடைபெற்ற இப்போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் 50 பேருக்கு மரக்கன்றுகளும் ஆண்கள் பிரிவில் முதல் 50 பேருக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. செப்டம்பர் 20 அன்று நடைபெறும் ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி பொன்விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பெண்கள் பிரிவினருக்கும் ஆண்கள் பிரிவினருக்கும் தனித்தனியாக முதல் பரிசாக 1500 இரண்டாம் பரிசாக 1000 மூன்றாம் பரிசாக 500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் உணவுகளும் வழங்கப்பட்டன.
