தூத்துக்குடி மாவட்டம் கலை பண்பாட்டுத்துறை அரசு இசைப்பள்ளி சார்பாக மற்றும் பகுதிநேர நாட்டுப்புற கிராமிய கலை சார்பாகவும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பாகவும் இன்று முத்து நகர் கடற்கரையில் கலை நிகழ்வுகள் நடைபெற்றது.

இதன் முக்கியமாக ஒயிலாட்ட கலை பரதநாட்டியம் கிராமிய பாடல் நிகழ்வுகள் நடைபெற்றது. இதன் முக்கிய நோக்கம் அனைத்து மக்களுக்கும் கலைகளை கற்றுக்கொள்ள ஒரு அறிய வாய்ப்பாகும். அதை தெரிந்துகொள்ள மேலும் சிறுவர்களுக்கு ஜவகர் சிறுவர் மன்றம் மூலமாக கலைகளை கற்றுக் கொடுக்கிறார்கள். 
பகுதி நேர நாட்டுப்புற கலைகளில் 18 வயது முதல் அனைவரும் இந்த கலைகளை கற்றுக் கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமிய கலையான ஒயிலாட்டம் புலியாட்டம் வில்லுப்பாட்டு கிராமிய பாட்டு நிகழ்வுகள் நடைபெறுகிறது. இது மாணவரின் சேர்க்கை விழிப்புணர்வுக்காக இன்று முத்து நகரில் பரதநாட்டியம் மற்றும் ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. 
தலைமை ஆசிரியர் வழிகாட்டுதலின்படி அரசு இசைப்பள்ளி பரத ஆசிரியர் ஆறுமுகம் ஏற்பாட்டில் மற்றும் வில்லுப்பாட்டு ஆசிரியர் குட்டி ராஜா, ஒயிலாட்ட ஆசிரியர் முனைவர். சகா.மா. சங்கர் ஆகியோர் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது.
பொதுமக்கள் ஆர்வமுடன் நிகழ்வுகளை கண்டுகளித்தனர். மாணவரின் சேர்க்கை பற்றி தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள். மேலும் சிலர் உடனே சேர்ப்பதாகவும் உறுதி கொடுத்தது மிக்க மகிழ்ச்சி கொடுக்கிறது. இந்த சிறப்பான நிகழ்விற்கு ஆதரவு தந்த மாவட்ட நிர்வாகத்திற்கும் மதிப்புமிக்க மேயர் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
