தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடைபெற்று வரும் பொருட்காட்சி வருகிற 17 ம் தேதி நிறைவு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நுழைவு கட்டணம், ஒரு ராட்டினத்தில் சுற்றுவதற்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்தர் மச்சாது கூறுகையில் தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பொருட்காட்சி நடத்துவது நடைமுறையாகும் அதன்படி மாதா கோவில் திருவிழா கொடியேற்றம் கடந்த 26 ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5 ம் தேதி வரை திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள கிராம மக்கள் பனிமய மாதா ஆலயத்திற்கு வரும்போது மக்களின் பொழுது போக்குக்காக தூத்துக்குடி பீச் ரோட்டில் ரோச் பூங்காவில் ஸ்நோஸ் பொருட்காட்சி குழு சார்பில் மாபெரும் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சி வரும் 17 ம் தேதி வரை நடைபெறுகிறது. அங்கு இரவை பாதுகாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சியில் 30 கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஜெயின்ட் வில், ரோலர், கோஸ்டர், கப் வீல், கொலம்பஸ், மகாராஜா ட்ரெயின், டோரா, டைட்டானிக், டபுள், டக்கர் கிராஸ்வில், சிலம்பம், கோஸ்டர் உட்பட 25 க்கும் மேற்பட்ட ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
மேலும் சிறுவர்களுக்கான பைக், கார், போர்ட், பலூன் ஹெலிகாப்டர், மற்றும் பல வகையான சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல குடிநீர் கழிப்பறை வசதிகளும் ரோச் பூங்கா பொருட்காட்சியில் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் வரும் 17 ம் தேதி வரை பொதுமக்கள் தங்களுடைய பொழுதுபோக்கு நிகழ்வுக்காக ரோச் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகள் பல்வேறு வகையான ராட்டினங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. மாதா கோவிலுக்கு வரும் பொதுமக்கள் ரோச் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்நோஸ் பொருட்காட்சிக்கு வந்து தங்களது இரவு பொழுதை ஆனந்தமாக கழித்து செல்லவும், 
அதோடு பொருட்காட்சியில் பள்ளி,கல்லூாி மாணவ, மாணவிகளுக்கு நுழைவு கட்டணம் இலவசமாகவும், ஓரு ராட்டிணம் சுற்றுவதற்கு இலவசம் என்றும் தெரிவித்தார். உடன் ஸ்நோஸ் பொருட்காட்சி குழு உறுப்பினர்கள் பலர் இருந்தனர்.

