தமிழக வெற்றிக்கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் நியமனம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, புதுக்கோட்டையில் தெற்கு ஒன்றியச் செயலாளர் விண்ணரசி S.M. குழந்தை ராஜா தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.


நிர்வாக வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழக வெற்றிக்கழகத்தில் ஏற்கனவே 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்த அமைப்பில், தற்போது மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் மாவட்டக் கழகச் செயலாளராக எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ், இணைச் செயலாளராக கோல்டன், பொருளாளராக சிவக்குமார், துணைச் செயலாளர்களாக விஜு, மரிய கிரேசியா, பெர்லின்சியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


அதேபோல், தூத்துக்குடி புறநகர் மாவட்டம் – ஓட்டப்பிடாரம் தொகுதிக்கான மாவட்டக் கழகச் செயலாளராக மதன் ராஜா, இணைச் செயலாளராக சுதாகர், பொருளாளராக அருண்குமார், துணைச் செயலாளர்களாக வசந்தி, ஆதிசங்கர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நியமனங்களை வரவேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை முதல்வராக அரியணையில் ஏற்றுவோம் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிரமாக களப்பணியாற்றுவோம் என்றும் கட்சியினர் உறுதியளித்தனர்.


இந்த நிகழ்வில் இணைச் செயலாளர் விஜய் ஆனந்த், துணைச் செயலாளர்கள் மணிகண்டன், ஜெனி, பொருளாளர் வீரபெருமாள், மத்திய ஒன்றியச் செயலாளர் ஜெபஸ்துராஜ், இணைச் செயலாளர் மாரிச்செல்வம், மேற்கு ஒன்றியச் செயலாளர் முத்துச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் முத்துக்குமரன், ரத்தினக்குமார், ரமேஷ், மாரி, திருத்துவராஜ், ஜெபா, ராபின், அந்தோணி எஸ்தாக், விக்னேஷ், ஆழ்வார், சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.