தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் தூத்துக்குடி மாமன்றத்தில் ஆறுமுகம் நியமன உறுப்பினராக பதவி ஏற்றார். இதனை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து, நகரில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும் மேயர் ஆய்வு செய்தார். லெவஞ்சிபுரம் மற்றும் சிவந்தாகுளம் பகுதிகளில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதையடுத்து, மேயர் நேரில் சென்று கண்காணிப்பு மேற்கொண்டார்.
சிவந்தாகுளம் பகுதியில் புதிய சாலை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, அந்த இடங்களிலும் ஆய்வு நடை பெற்றது.
இந்த ஆய்வில் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர். பணிகள் விரைவாக முடிவடைந்து பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்படப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாமன்றத்தில் ஆறுமுகம் நியமன உறுப்பினராக பதவி ஏற்றார் – மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பொது நலச் செயல் குறித்து விழிப்புணர்வு : “உணவை வீணாக்காதீர்” — Dr. சகா அழைப்பு!!
அடுத்த
“தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பொறுப்பேற்பு – மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா வாழ்த்து”
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026