டாக்டர் ஐசரி K. கணேஷ் தலைமையில் செயல்பட்டு வரும் தேக்வாண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் 41வது தேசிய தேக்வாண்டோ போட்டி கடந்த 12, 13, 14 தேதிகளில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பாலயோகி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டிகளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.


இந்தப் போட்டிகள் கியுரிகி மற்றும் பூம்சே (கட்டா) என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் பூம்சே (கட்டா) 65 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் திருநெல்வேலி மாவட்ட தேக்வாண்டோ சங்க செயலாளர் மாஸ்டர் N. ரவீந்திரன் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.


74 வயதிலும் தன்னம்பிக்கை, கட்டுப்பாடு மற்றும் உடல் தகுதியுடன் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்றது விளையாட்டு உலகில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்தச் சாதனை மூலம் தமிழ்நாட்டிற்கும், குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.


இந்த வெற்றியை தொடர்ந்து தமிழ்நாடு தேக்வாண்டோ சங்க பொது செயலாளர் கிராண்ட் மாஸ்டர் P. செல்வமணி, பொருளாளர் மாஸ்டர் S. கோதண்டன், துணை தலைவர் மாஸ்டர் K. மனோகர், திருநெல்வேலி மாவட்ட தேக்வாண்டோ சங்க தலைவர் V.M. குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், மாணவ மாணவிகள் மாஸ்டர் ரவீந்திரனை மனமார்ந்த பாராட்டுகளுடன் வாழ்த்தினர்.


74 வயதிலும் தேசிய போட்டியில் தங்கம் வென்ற மாஸ்டர் ரவீந்திரன், இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கமும் முன்மாதிரியாகவும் திகழ்ந்து வருகிறார்.