தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் எட்டையாபுரம் சாலையிலுள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் பிரதீப், பாரதி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், “மாநில இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை எழுச்சி நாளாக அனைவரும் கொண்டாட வேண்டும். இளைஞர் அணியினர் கடமை உணர்வுடன் செயல்படுவது கட்சியின் முன்னேற்றத்திற்கும் மக்களுக்கான சேவைக்கும் அவசியம்,” என்றார்.
அவர் தொடர்ந்து, “தற்போது 4-ம் தேதி முதல் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை தீவிர வாக்கு திருத்தம் (SIR) பணி நடைபெறுகிறது. இளைஞர் அணியினர் தங்களின் பகுதிகளில் பூத் வாரி செயல்பட்டு, படிவங்கள் சரியாக நிரப்பப்படுவதில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதன் மூலம் வாக்குகள் பறிபோகாமல் பாதுகாக்க முடியும்,” என்றார்.
பாஜக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து குழப்பத்தை உருவாக்க முயல்கின்றதாக குறிப்பிடும் அவர், அதற்கு திமுக இடமளிக்காது எனத் தெரிவித்தார். ஒவ்வொரு பகுதியிலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை மக்கள் பயன்பெறும் வகையில் சமூக பணிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் மூலம் கொண்டாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி தொகுதியில் 120 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி, கோவில்பட்டி ஹாக்கிப் போட்டி, விளாத்திகுளத்தில் கபடி போட்டி போன்றவை நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தல் மிக முக்கியமானது என்பதால், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியபடி 200 தொகுதிகளையும் வென்று சாதிக்க அனைவரும் முழுமையாக செயல்பட வேண்டும்” என்றார்.
சென்னையில் நடைபெற்ற 75வது அறிவுத்திருவிழாவில் வடக்கு மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் பங்கேற்ற இளைஞர்களை அவர் பாராட்டினார்.
கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
வடக்கு மாவட்டம் முழுவதும் 27ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
வரவிருக்கும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி
மு.க. ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக அமைத்தல்
மற்றும் இரு அமைப்பு தொடர்பான தீர்மானங்கள்.
கூட்டத்தில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை அமைப்பாளர்கள் செல்வின் ரவி, சங்கரநாராயணன், பிரவீன்குமார், பகுதி அமைப்பாளர்கள் சூர்யா, நிர்மல்குமார், ராஜாபொயசாமி, செந்தூர்பாண்டி, ராமசந்திரன், துணை அமைப்பாளர் சிவசுந்தர், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், மணி, அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நன்றியுரையை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோசப் அமல்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணிக் கூட்டத்தில்: “கடமை உணர்வே இளைஞர்களின் மிகப்பெரிய பலம்” — அமைச்சர் கீதாஜீவன் உரை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“குழந்தைகளும் நூல்களும் – அறிவின் இரு கண்கள்!”
அடுத்த
“சாலை பாதுகாப்புக்கு முன்னுரிமை – தூத்துக்குடியில் மணல் திட்டுகள் அகற்றுப் பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026