எட்டையாபுரத்தில் நடைபெற்று வரும் பாரதியார் பிறந்த வீட்டை அதன் பழமையான அழகை காத்து புதுப்பிக்கும் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக விளக்கம் பெற்று, பணிகள் வேகமாகவும் தரமாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் எட்டையாபுரம் வட்டாட்சியர் சுபா, தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணைத் தலைவர் கதிர்வேல், மாவட்ட மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், இளைஞர், மாணவர், மகளிர் அணியினரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
எட்டையாபுரத்தில் பாரதியார் பிறந்த வீடு – பழமை மாறாமல் புதுப்பிப்பு பணிகள் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கரிசல்காட்டு எழுத்தின் பெருமைமிகு நினைவு — கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தை பார்வையிட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி.!!
அடுத்த
இனிகோ நகர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கீதா ஜீவன்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026