தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில், நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (YRC) சார்பாக இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸ்சி பெர்னாண்டோ, துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி மி.சு. எழிலரசி, சுயநிதிப் பிரிவு இயக்குநர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் டாக்டர் ஆர். சாந்தி அவர்கள் இரத்ததானத்தின் அவசியம் மற்றும் அதன் மூலம் உயிர்களை காப்பதன் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
முகாமில் மருத்துவர்கள், பணியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். மனித நேய உணர்வுடன் பிறருக்கு மறுவாழ்வு கொடுக்கும் எண்ணத்தில் 25 மாணவர்கள் தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினர். இரத்ததானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வை NSS மற்றும் YRC ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்கள் இணைந்து சிறப்பாக நடத்தியுள்ளனர்.
தூத்துக்குடி
மனிதநேயம் புலப்படும் இரத்ததானம் – தூய மரியன்னை கல்லூரி மாணவர்கள் 25 பேர் தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
டிக்கெட் கேன்வாசர் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வும் அடையாள அட்டையும் வழங்கக் கோரி தூத்துக்குடியில் தமிழக சோசலிஸ்ட் தொழிற்சங்க பேரவை ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
அண்ணாநகர் பகுதியில் நடைபெறும் வடிகால் தூர்வாரும் பணிகளை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026