தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் நேற்று புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இந்நிகழ்ச்சியின் பகுதியாக தூத்துக்குடி பங்களா தெருவைச் சேர்ந்த சுமார் 30 குழந்தைகள் ராதை வேடமணிந்து முக்கிய சாலைகள் வழியாக கோயிலை அடைந்தனர். கோயில் வளாகத்தில் குழந்தைகள் பல்வேறு பாடல்களுக்கு அழகிய கோலாட்ட நடனம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
நிகழ்ச்சியை தினமலர் தினேஷ் துவக்கி வைத்து, பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி, சிவன் கோவில் முன்னாள் அறங்காவலர் ஆறுமுகம், அதிமுக வக்கீல் அணி மாவட்ட இணைச் செயலாளர் சரவணப்பெருமாள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், கந்தசாமி, வைகுண்டபதி பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி குழந்தைகள் ராதை வேடமணிந்து கோலாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கரூரில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திய இபிஎஸ் – ‘‘விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம்… குற்றம் சொல்ல விருப்பமில்லை’’
அடுத்த
தூத்துக்குடியில் காமாட்க்ஷி பாலி கிளினிக் புதிய மருத்துவமனை திறப்பு!!
இதையும் படிக்கலாம்
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026