தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் உள்ள நுண் உர செயலாக்க மையங்களான மில்லர்புரம், மச்சாது நகர், மேட்டுப்பட்டி, கதிர்வேல் நகர், உட்பட பல பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது தூய்மை பணியாளர்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் :-
மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் தூய்மை பணியாளர்கள் சுமார் 2000 பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் அதிகாலை 5 மணி முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தினசரி 4 மண்டலங்களிலும் சுமார் 180 டன் குப்பைகளை சேகரித்து அதை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என சுழற்சி முறையில் எடுத்து மக்கும் குப்பைகளை உரம் தயாரித்து அந்த உரத்தை மாநகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் சுமார் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் நிலையில் மக்கும் குப்பைகளில் இருந்து பெறக்கூடிய உரத்தினை இதன் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இதை தவிர்த்து இந்த உரமானது செடி வளர்ப்பதற்காக மற்றவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
மாநகராட்சி பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் கழிவு நீரை சுத்திகரித்து நல்ல சுத்தமான நீராக மாற்றி செடி வளர்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி எல்லா வகையிலும் மாசு இல்லாத மாநகரத்தை உருவாக்குவது மட்டுமின்றி சுகாதாரத்தையும் பேணி பாதுகாத்து வருகிறோம். அந்த அடிப்படையில் மக்களுக்கான பணியில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களும் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அதனை வரும் நாட்களில் படிப்படியாக நிறைவேற்றித் தருவதாகவும் தெரிவித்தார்.
ஆய்வின்போது பகுதி செயலாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர் முத்துவேல், சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், ராஜபாண்டி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், ஜாஸ்பர், உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், பணியாளர்கள், உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு தூய்மை பணியாளர்களும் ஒரு காரணம் - மேயர் சொன்ன தகவல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி : பாலியல் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!!
அடுத்த
மார்ச் 24,25 வங்கி ஸ்டிரைக் நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலைக்கு வாய்ப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026