எதிர் வரும் பருவமழையை எதிர்கொள்ள மழைநீர் வடிகால்களின் ஓட்டத்தை கண்காணிக்கும் வகையில்,
50 வது வார்டுக்கு உட்பட்ட அமுதாநகர், சாந்திநகர், கணேசன் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள வடிகால் வடிந்து ஓடி இணையும் வள்ளிநாயகபுரம் பிரதான கால்வாய் சேதமடைந்த நிலையில் இருப்பதால், அதை சரி செய்ய மேற்கு மண்டலத்தில் வைத்து இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமிடம் கவுன்சிலர் சரவணகுமார் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் தெரிவித்ததாவது :-

தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டுக்கு உட்பட்ட அமுதா நகர், சாந்தி நகர், கணேசன் காலனி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மழை நீர் வடிகால் வழியாக வரும் கழிவுநீர் மற்றும் மழை நீர் ஒன்று சேர்ந்து வெளியேறும் இடமாக வள்ளிநாயகபுரம் மெயின் கால்வாய் உள்ளது.

ஆனால் அந்த கால்வாய் இப்போது இடிந்த நிலையில் காணப்படுகிறது. பெருமளவில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ஓடி கடக்க இயலவில்லை எதிர்வரும் பருவமழையை கருத்தில் கொண்டு மேயர் அவர்கள் வடிகால் கால்வாயை ஆய்வு செய்து விரைந்து சீரமைப்பு செய்ய உத்தரவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். என்று கவுன்சிலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.