குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான எரிபந்தாட்டப் போட்டியில் தூத்துக்குடி கமாக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாணவர்கள் பெற்ற வெற்றியை பாராட்டிய கீதா ஜீவன், அவர்கள் தொடர்ந்து மாநில, தேசிய மட்டப் போட்டிகளிலும் சாதனை படைக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் மேகநாதன், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், வட்டச் செயலாளர் சாமிநாதன், முன்னாள் பகுதி பிரதிநிதி பஞ்சுராஜ், உடற்கல்வி ஆசிரியர் இசக்கிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இந்தச் சாதனை மாணவர்களின் எதிர்கால விளையாட்டு வாழ்க்கைக்கு வலுசேர்த்துள்ளது.
தூத்துக்குடி
மாவட்ட எரிபந்தாட்டப் போட்டியில் சாம்பியன் — தூத்துக்குடி கமாக் பள்ளி மாணவர்கள் அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் அருணாச்சலபுரத்தில் புதிய பகுதிநேர நியாய விலைக் கட்டிடம் திறப்பு!!
அடுத்த
பால்பாண்டி நகர் முதல் கோக்கூர் வரை – வடிகால் பணிகள் ஆய்வில் மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026