திருச்செந்தூர் தொகுதி உடன்குடி பகுதியில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டம் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டார். மேலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” என்ற உறுதியுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.