தூத்துக்குடி அருகே உள்ள ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் சமீபத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா தலைமையில், பள்ளி வளாகத்தில் கொடி அசைத்து பேரணி தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மேரி சீத்தா முன்னிலை வகித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேச்சுக்களை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமாரவேல், என்.சி.சி. அலுவலர் ஜனார்த்தனம், மற்றும் ஆசிரியர்கள் நளினா செல்வமுத்துலெட்சுமி, லீமா, ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி மற்றும் நிகழ்வு ஏற்பாட்டுப் பணிகள் உடற்கல்வி ஆசிரியர் சதீஷ் சந்திரன் மற்றும் என்.சி.சி. ஆசிரியர் ஜீசஸ் ஆல்பன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றன.
பேரணி பள்ளியிலிருந்து துங்கி சவேரியார்புரம் வரை சென்ற பின்னர் மீண்டும் பள்ளியில் வந்து நிறைவு பெற்றது. மாணவர்கள் மற்றும் சமூகத்தினருக்கு போதைப்பொருள் எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு சிறப்பாக அமைந்தது.
தூத்துக்குடி
ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வெள்ளத்தில் வீடிழந்த மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த பாஜக — நைனார் நாகேந்திரன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
அடுத்த
தூத்துக்குடி: ரத்னா காலனி வழித்தடம் மீட்கப்பட்டு பொதுமக்களுக்கு திறப்பு – மேயர் ஜெகன் நடவடிக்கை உறுதி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026