தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தலைமையேற்றார். மாா்க்கண்டேயன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டம் மாநாடு போல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

வடக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில், “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர்களை சிறப்பித்த வகையில் 15 பேர் வீதம் மொத்தம் 45 பேருக்கு சேலை, வேஷ்டி, ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்பட்டன. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதிமொழியுடன் மக்கள் கலந்து கொண்ட நிலையில், கீதாஜீவன் உரையாற்றினார்.

அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்,
“40 சதவீத மக்கள் திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ளனர். காரணம் தமிழ்நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒன்றிய அரசு எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும், தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. திராவிடம் என்ற சொல் சிலருக்கு பிடிக்காது. ஆனால் கீழடி அகழ்வாராய்ச்சி மூலமாக 3000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் வீடு கட்டி வாழ்ந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவுகளை மத்திய அரசுக்கு அளித்தோம். ஆனால் மோடி அரசு அதை அங்கீகரிக்கவில்லை. காரணம் – தமிழ் நாகரிகம் 3000 ஆண்டுகளுக்கு முன்பே உருவானது வெளிநாட்டிற்கு தெரியக்கூடாது என்பதற்காகத்தான்.

மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளன. அதை தடுக்கும் வகையில், நீட் தேர்வை கொண்டு வந்து கிராமப்புற மாணவர்களின் வாய்ப்பை பறித்துள்ளது மத்திய அரசு. மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாவதை தடுக்கும் சதி தான் நீட்.

ஜிஎஸ்டியை குறைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தினோம். அப்போது ‘கவுன்சில் முடிவு’ என்று கூறிய நிதி அமைச்சர், இன்று தாங்களே குறைத்துவிட்டோம் என்று மார்தட்டுகின்றனர். மக்களுக்கு நல்லது தான் என்றாலும், கடந்த எட்டு ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் மக்களை சுரண்டியது மத்திய அரசே. நான்கு மாநிலங்களில் தேர்தல் வருவதால் தான் ஜிஎஸ்டி குறைத்துள்ளனர்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வு காரணமாக பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. தங்க விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதை கட்டுப்படுத்த மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. கோடீஸ்வரர்கள், பெரும் முதலாளிகளுக்கான திட்டங்களை மட்டும் பாஜக அரசு செய்து வருகிறது.

பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் வாழ்ந்த தமிழ்நாடு – இங்கு பாஜக எதை செய்தாலும் மக்கள் ஒன்றிணைந்து எதிர்க்கிறார்கள். பிற மாநிலங்களில் சில கடன்களை ரத்து செய்தும், தமிழக மாணவர்களின் கல்விக் கடனை மத்திய அரசு ரத்து செய்யவில்லை. அதே நேரத்தில் தொழிலதிபர்களின் கோடி கணக்கான கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர்.

தமிழகத்தில் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, ஏற்றுமதியில் முதலிடம், மோட்டார் வாகன உற்பத்தியில் அதிகம், வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. வாக்குரிமை மட்டுமல்லாமல், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு தாயுமானவன் திட்டத்தில் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகையும், பாலின் விலை குறைப்பும் திமுக அரசு செய்து வருகிறது.

கொரோனா காலத்தில் எடப்பாடி எல்லாவற்றையும் அடைத்து மக்களை முடக்கியார். ஆனால் திமுக ஆட்சியில் மக்களுக்கு நான்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டதால் பொருளாதாரம் உயர்ந்தது. தூத்துக்குடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது. உப்பள தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் உதவி கிடைத்தது.

பாஜக அரசு இல்லாத குற்றச்சாட்டுகளை தமிழக அரசின் மீது சுமத்துகிறது. திமுகவின் வாக்கு வங்கியை கலைப்பதற்காக முயற்சி செய்கிறது. எடப்பாடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முகம் மறைத்து சந்தித்து வருகிறார். அதிமுக, பாஜகவிடம் அடகு வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் உதயம் மின் திட்டம், ஒரே நாடு ஒரே ரேஷன் போன்ற மக்களை பாதிக்கும் திட்டங்கள் வந்துள்ளன.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். எல்லோரும் முன்னேற, அனைத்து பகுதிகளும் முன்னேற, தமிழ் இனத்திற்கு எதிரானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டை காப்பாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை மீண்டும் ஆட்சிக்கட்டில் அமர்த்த வேண்டும். இந்த மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்று, முதலமைச்சரின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மாா்க்கன்டேயன் சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில், “மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கனிமொழியும், முதலமைச்சரால் ‘பெண்சிங்கம்’ என்று அழைக்கப்பட்ட கீதாஜீவனும் இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு தொண்டனையும் பெயர் சொல்லி அழைக்கும் செயல் ஆற்றல் மிக்கவர்கள். விஜய் 50 பேர் பெயரை கூட தொடர்ந்து சொல்ல முடியாது. ஆனால் திமுக எந்த விளையாட்டையும் எந்த நேரத்தில் விளையாடினாலும் வெற்றிகரமாக செய்கிறது” என்றார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், “கூட்டணியை தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நம்முடைய கடமை ஒவ்வொருவரும் 50–100 வாக்குகளை சேகரித்தால் போதும். அதனால் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையை உருவாக்கலாம்” என்றார்.

மாநில பேச்சாளர் சரத்பாலா, “திமுகவை அழிப்பேன் என்று பலர் கூறினாலும், 76 ஆண்டுகளாக வெற்றி நடை போடுகிறது. ஒரு படத்திற்கு 250 கோடி வாங்கும் விஜய், நடித்த படம் ஒன்று 160 கோடி தான் வசூலித்தது. பாதிக்கப்பட்ட தயாரிப்பாளருக்கு உதவி செய்யவில்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பட தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படும்போது, அவர்களுக்காக பணம் கொடுத்து உதவுகிறார். இப்படிப்பட்ட செயல்களில் யார் உயர்ந்து நிற்கிறார் என்பதை மக்கள் யோசிக்க வேண்டும்” என்றார்.

மாநில பேச்சாளர்கள் ஆண்டாள் பிரியதர்ஷினி, சரத்பாலா, இருதயராஜ், தமிழ்பிரியன், தொகுதி பார்வையாளர்கள் இன்பாரகு, பெருமாள், கணேசன், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், சிறுபான்மை அணி துணை செயலாளர் பொன்சீலன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, நகர மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர்கள் ராஜ்மோகன், செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிதங்கம், கோட்டுராஜா, ராஜா, ரமேஷ், ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், சுப்பிரமணியன், சின்னப்பாண்டியன், முருகேசன், ராதாகிருஷ்ணன், நவநீதகண்ணன், சின்னமாரிமுத்து, கருப்பசாமி, மும்மூர்த்தி, செல்வராஜ், அன்புராஜன், ராமசுப்பு, ஜெயக்கண்ணன், இம்மானுவேல், நகர செயலாளர் சுரேஷ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணை செயலாளர்கள் கீதா முருகேசன், பிரமிளா, கனகராஜ், பொருளாளர் அனந்தையா, மாவட்ட அணி நிர்வாகிகள் ஆண்டோணி ஸ்டாலின், அபிராமிநாதன், கவிதாதேவி, மதியழகன், குபோ இளம்பாடி, ஜெயசிங், சீனிவாசன், ஆபிரகாம், அருண்குமார், ரமேஷ், ராமலட்சுமி, ராமர், நிக்கோலாஸ் மணி, கணேஷ்குமார், அந்தோணி கண்ணன், அருணாதேவி, நாகராஜன், பிரபு, ராதாகிருஷ்ணன், ஜேசையா, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை, அஸ்வின், ஸ்ரீதர், கரன், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், ஜெயக்கனி, முருக இசக்கி, ஆனந்தசேகர், கிறிஸ்டோபர் விஜயராஜ், பரமசிவன், ரூபன், ரூபராஜா, மகேஸ்வரன்சிங், வினோத், சாரதி, பிக்அப்தனபால், நாராயணவடிவு, சக்திவேல், பரமசிவம், சாகுல்ஹமீது, ராமசந்திரன், கருப்பசாமி, ரவி, செல்வின், பிரவின்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வக்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், இசக்கிராஜா, ஜான்சிராணி, பொன்னப்பன், கண்ணன், ராமர், பேபி ஏஞ்சலின், இளம் பேச்சாளர் செந்தூர் பாண்டி, பகுதி பொருளாளர் முத்துராஜா, வட்டச் செயலாளர்கள் பாலகுருசுவாமி, சுப்பையா, சேகர், சுரேஷ், செல்வராஜ், மனோ, செந்தில்குமார், டென்சிங், சுரேஷ்மகாராஜா, சக்திவேல், மந்திரகுமார், பத்மாவதி, பொன்னுச்சாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், பகுதி அணி அமைப்பாளர்கள் காசிராஜன், சந்தனமூனீஸ்வரன், வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், அருணகிரி, புஷ்பராஜ், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், பேச்சிமுத்து, செந்தில்குமார், மணி, அல்பட் சிவசுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக்கினர்.