தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் இன்று காலை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு தீர்வுகாணும் நிகழ்வாக அமைந்தது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மற்றும் மன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

முகாமில் குடிநீர் பிரச்சினை, கழிவுநீர் தொடர்பான சிக்கல்கள், வீட்டு தீர்வை வசதி கோரிக்கை, பிறப்பு–இறப்பு சான்றிதழ் விண்ணப்பம், ரேஷன் கார்டில் பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்கள் மனுக்கள் அளித்தனர். அனைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, அவற்றை விரைவாக பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த முகாம் மூலம் மக்கள் தங்களது பிரச்சினைகளை நேரடியாக பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகவும், தகுந்த தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.