தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கு மண்டல வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் மேற்கு மண்டல தலைவியும், கவுன்சிலருமான அன்னலட்சுமி கோட்டு ராஜா மூவர்ண தேசிய கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கி சுதந்திர தின மரியாதை செலுத்தினார்.



நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மற்றும் மாநகராட்சி அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.