இந்திய அளவில் மத வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு இஸ்லாமிக் பெடரேஷன் ஆப் தமிழ்நாடு IFTN சார்பாக இந்திய ஒன்றிய அரசிற்க்கும், தமிழ்நாடு அரசிற்கும் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் அவர்களின் அறிக்கை தெரிவித்தது :-
தொடர்ந்து இந்திய ஒன்றியத்திலும் வட மாநிலங்களிலும் பாசிச பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மற்றும் தமிழகத்திலும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சிறுபான்மையினர் மத வழிபாட்டு உரிமை, உணவு உரிமை, உடை உரிமை, அடையாள உரிமை, தொடர்ந்து நசுக்கப்பட்டும் பாசிச கும்பல்களால் மத அடையாளங்கள் வைத்திருக்கும் சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்கப்படுவதும் கொல்லப்படுவதுமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதனை தடுக்கும் வகையிலும் இச்செயல்களில் ஈடுபடுபவரை தண்டிக்கும் வகையிலும் இந்திய அளவில் தலித்துகளின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு ஜாதிய வன்கொடுமை சட்டம் PCR (PROTECTION OF CIVIL RIGHTS) இருப்பது போல் இஸ்லாமியர்கள் மற்றும் மத சிறுபான்மையினர் உரிமைகளும் மத அடையாளங்களுடன் நடமாடும் உரிமையை கேலி மற்றும் தாக்குதலுக்கு உல்லாவதை தடுக்கும் பொருட்டு PRR (PROTECTION OF RELIGION RIGHTS) தமிழக அளவிலும் இந்திய அளவிலும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இஸ்லாமிக் பெடரேஷன் ஆப் தமிழ்நாடு சார்பாக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அளவில் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் திமுக எம்பிக்கள் வலியுறுத்தல் மூலமாக ஒன்றிய அரசிற்கும் PRR (PROTECTION OF RELIGION RIGHTS) சட்டம் இயற்ற நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டு வரவும் இந்தியா கூட்டணி சார்பாக அனைத்து கட்சிகள் கூட்டத்தில் வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். என்று தூத்துக்குடி சம்சுதீன் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி
மத உரிமை பாதுகாப்புச்சட்டம் தமிழகம் மற்றும் இந்திய அளவிலும் உருவாக்க வேண்டி தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) கோரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் கோல்டன் நகா் கணபதி கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்!!
அடுத்த
நீதிமன்ற உத்தரவை மீறி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026