தூத்துக்குடி திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை, மாநிலங்களவை குழுத் தலைவரும், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழி எம்பிக்கு செப்டம்பர் 17 ம் தேதி கரூரில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் முதலமைச்சா் மு.க. ஸ்டாலினும் தலைமை கழகமும் அறிவித்திருக்கின்ற மிக உயரிய விருதான பெரியார் விருதுக்கு தோ்வு பெற்றதையொட்டி சென்னை இல்லத்தில் கனிமொழி எம்.பியை மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளரும் பாளையங்கோட்டை தொகுதி பாா்வையாளருமான வசந்தம் ஜெயக்குமாா் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறி ஆசி பெற்றாா்.
அப்போது கலந்துரையாடலின் போது திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சருக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும். தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகாிக்க வேண்டும். ஏற்கனவே தலைவர் கூறிய படி 2026 ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார். அதற்கு வலுசோ்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சோி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் என்று கலந்துரையாடலின் போது திமுக மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமாாிடம் கனிமொழி எம்.பி கூறினார்.
தூத்துக்குடி
பொியாா் விருதுக்கு கனிமொழி எம்.பி தோ்வு - மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமாா் நோில் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலினை இரண்டாவது முறையாக முதலமைச்சர் அாியணையில் அமர வைக்க அனைவரும் பணியாற்ற வேண்டும் - பொறியாளர் அணி கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!
அடுத்த
தூய்மை பணியாளா்கள் நலன் குறித்து ஐஎன்டியுசி செயலாளர் கதிா்வேல் அறிக்கை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026