தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம், தோப்புத் தெரு, வீரநாயக்கன்தட்டு, உப்பாற்று ஓடை, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக உருவான நிலைமையை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தப் பகுதிகள் சுமார் 12 கிலோமீட்டர் நீளத்தில் கோரம்பள்ளம் குளத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளன. தற்போது கோரம்பள்ளம் குளத்தில் இருந்து பத்தாயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மழைநீர் மாநகரப் பகுதிக்குள் புகாத வகையில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பகுதிகளில் உள்ள நீரின் ஓட்டம், வடிகால் பாதைகள், நீர் தேக்கம் போன்ற விவரங்களை மேயர் ஆய்வு செய்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் பகுதி கழக செயலாளரும் மாநகர மன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மன்ற உறுப்பினர் முத்துவேல் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கனமழை நிலைமையைக் கண்காணித்து மழைநீர் வெளியேற்றப் பணிகளை மேயர் ஜெகன் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைநீர் வெளியேற்ற பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
தூத்துக்குடியில் கனமழை நிலைமைகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026