தனசேகரன் நகர் பகுதியில் மாநகராட்சியின் சார்பாக நடைபெற்று வரும் புதிய மாவட்ட மைய நூலக கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், 
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாணவ மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரப்பட்டு வருகிறது. 
அதன் ஒரு பகுதியாக தனசேகரன் நகர் பகுதியில் மாநகராட்சியின் சார்பாக நடைபெற்று வரும் புதிய மாவட்ட மைய நூலக கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். 
ஆய்வின் போது உடன் மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி கழக செயலாளர் நிர்மல்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர் என்று தெரிவித்தார்.