தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக சண்முகபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளுக்கு புதிய இணைப்பில் வழங்கப்படும் நீரின் அளவை பார்வையிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். 
ஆய்வின் போது பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மாமன்ற உறுப்பினர் பாப்பாத்தி அம்மாள், வட்ட கழக பிரதிநிதி பால ரூபன் உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
