தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், மகிழ்ச்சிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய சாலை பணிகளையும், புதிய குடிநீர் வழித்தடத்தில் வருகின்ற நீரை குறித்தும் பார்வையிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கனகராஜ், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வின் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
