தூத்துக்குடியில் சங்கராபுரம், பெருமாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.



பின்னர் அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக சண்முகபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான சங்கராபுரம், பெருமாள் தெரு, தாமோதரன் நகரில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும்  சில பகுதிகளுக்கு குடிநீர் வரவில்லை என்ற கோரிக்கையிணை தொடர்ந்து அந்த பகுதியில் மாற்று வழித்தடத்தில் குடிநீர் வழங்க அறிவுறுத்தியதாக தெரிவித்தார். ஆய்வின் போது, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட செயலாளர் சுரேஷ் மகாராஜா, திமுக நிர்வாகி ஏசுவடியான், வட்ட பிரதிநிதி பால ரூபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.