தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தருவைக்குளம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், சுத்திகரிக்கப்படும் நீரில் உரக்கடங்கில் வளர்க்கப்படும் மரங்களையும், சுத்திகரிப்பட்ட நீரை தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அதனை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இது போன்று கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மிகவும் உதவும் என்றும் கூறினார்.

தமிழ்நாடு அரசின் தொழில் முன்னேற்றக் கழகத்தின் மேலாண் இயக்குனர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
