தூத்துக்குடி மாநகரம் திரேஸ்புரம் பகுதியில் திமுக சார்பில் முதல்வரின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
சிறப்புரை நிகழ்த்திய கொண்டு இருக்கும் வேளையில் அருகில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமிய சகோதரர்கள் நோன்பு விரதங்களை கடைபிடித்து நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தி தொழுகையில் ஈடுபட்டனர்.
அப்போது மேடையில் பேசி கொண்டு இருந்த அமைச்சர் தொழுகை பாடல் ஒலிபெருக்கியின் மூலம் கேட்ட உடனே தனது பேச்சை நிறுத்தி அமைதி காத்து தொழுகைக்கு உரிய மரியாதை அளித்து பின்பு தனது உரையை தொடங்கினார்.
சில நிமிடம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைதி காத்தது. அமைச்சரின் இந்த செயல் பொதுமக்களிடையே பேசும் பொருளானது. பின்னர் திரேஸ்புரம் பகுதி மக்களுக்கு தனது கரங்களால் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பு செய்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திரேஸ்புரம் பகுதி திமுக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் மாவட்ட கழக நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், வட்ட செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
பள்ளிவாசலில் தொழுகை பேச்சு நிறுத்தி அமைதி காத்த அமைச்சர் கீதா ஜீவன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாஜக பிரமுகர் காசிலிங்கம் தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றி ஆர்பாட்டம்!!
அடுத்த
131 நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக கணினி பட்டா - அமைச்சர் வழங்கி தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026