தூத்துக்குடி மாநகராட்சி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 6 வது புத்தகத் திருவிழா தொடர்ந்து படி தூத்துக்குடி யின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்,
    
தூத்துக்குடி மாவட்டத்தின் 6 வது புத்தகத்திருவிழா “தொடர்ந்து படி தூத்துக்குடி” என்ற தலைப்பின் கீழ் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் எதிர்கால சந்ததியினர்களான இளைய சமுதாயத்தினர்களிடையே புத்தகம் வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையிலும், வரலாறு, பண்பாடு, மொழி, கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இப்புத்தகம் திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடத்துவதற்கு அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆண்டு இப்புத்தக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களிடையே இலக்கிய வினாடி வினா, இலக்கிய சொற்பொழிவுகள், கலை இலக்கிய நிகழ்வுகள், கவிதை வாசித்தல் புனைதல் உள்ளிட்ட புதிய நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டது. இதன் மூலம் எதிர்கால சந்ததியினர்களான அனைத்து மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.

இந்த புத்தகத் திருவிழா என்பது பெயரளவுக்கு நடத்தப்படாமல் சும்மா ஏனோதானோ என்று நடக்காமல் உண்மையிலேயே புத்தகத் திருவிழா நல்ல ஒரு திருவிழாவாக நடத்தப்பட வேண்டும். அத்தனை பேர் அதில் பங்கெடுக்க வேண்டும். குறிப்பாக எதிர்கால தமிழ் சமுதாயமாக இளைஞர்களையும், மாணவ - மாணவிகளையும் அதிலே பங்கெடுக்க வைக்க வேண்டும் என்ற ஒரு உயர்ந்த நோக்கத்தோடு அனைத்து மாவட்டங்களிலும் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. அதே போல் புத்த்க திருவிழாவில் பதிப்பகத்தாருக்கும், புத்தகம் வெளியிட்டவர்களுக்கும் நீண்ட காலம் புத்தகம் விற்காமல் நஷ்டமடைய கூடிய நிலையில் இருந்தது. அது கடந்த நான்காண்டு காலமாக நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றியமைத்துள்ளார்கள். பதிப்பத்தாருக்கு அவர்களுடைய புத்தகங்கள் விற்பது மட்டுமல்லாமல் எதிர்கால சமூதாயமாகிய மாணவ மாணவிகள், அனைவருக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
நம்முடைய கலெக்டரை பொருத்தவரை முதலமைச்சர் முதன் முதலாக நல்ல முறையில், ஒரு ஆக்க பூர்வமான நல்ல பயனளிக்கக்கூடிய முறையில் ஒரு புத்தகத் திருவிழா நடத்தப்பட வேண்டும் என்று கூறிய போது அதை அவர் திட்டமிட்டு எப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் வடிவமைத்தவராக இருந்தவர். ஆகவே, எங்கள் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நம்முடைய புத்தக திருவிழா திட்டமிட்டப்படி கலெக்டர் முடித்து விடுவார்கள் என்று சொன்னார்கள்.

அதுபோல அவருடைய அந்த ஆலோசனைப்படி நகரின் மத்தியில் நடத்தப்பட்டு எதிர்பார்க்கப்பட்டது போல் இன்று நல்ல முறையில் வெற்றி அடையப்பட்டுள்ளது.
 அதுபோல அனைத்து குழந்தைகளும் எவ்வாறு பணம் சேமித்து புத்தகத் திருவிழாக்களில் புத்தகம் வாங்குவது குறித்து ஒரு விழிப்புணா்வை ஏற்படுத்தியுள்ளார். இங்கு வந்த மாணவர்களை உண்டியலோடு பார்க்கும்போது நமக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதுபோல புத்தகம் படிக்கிற பிள்ளைகள் நிறைய மாணவர்கள் இங்கு புத்தகங்களை வாங்கி மகிழ்ச்சியடைத்துள்ளனர்.

நம்முடைய மாவட்ட நிர்வாகம் முதலமைச்சருடைய எண்ணப்படி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது என்பதை நான் கூறிக்கொண்டு, நமது மாவட்டத்தில் ஒரு பக்கம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நமது மக்கள் இருக்கும் பகுதிக்கே வரக்கூடிய ஒரு நிகழ்வு மாவட்டமெங்கும் தற்போது நடைபெற்று வருகிறது. அதுபோல் வாரம்தோறும் சனிக்கிழமை நலம் காக்கும் ஸ்டாலின் என்ற முகாம் மக்கள் வாழும் பகுதியில் எல்லா உயர் சிகிச்சையும் மக்களுக்கு தேவைப்படும் அத்தனையும் பரிசோதனை செய்து அந்த திட்டம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு முகாம்கள் ஒரு பக்கம், திட்டங்கள் ஒரு பக்கம் என்று அத்தனை திட்டங்களையும் முறையாக மாவட்ட நிர்வாகம் குறிப்பாக கலெக்டர் தலைமையில் உள்ள அத்தனை துறை சார்ந்த மாவட்ட அதிகாரிகளும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்து வருகிறார்கள் என்று நான் பாராட்டி இந்த நிறைவு விழாவிற்கு உழைத்த அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினாா்.

எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் ஆட்சியில் கிடைக்கிறது. ஓரணியில் தமிழ்நாடு என்றும் கூறப்பட்டுவரும் நிலையில் தூத்துக்குடி பத்திாிகையாளா்களின் நீண்டநாள் கோாிக்கையான வீட்டுமணை பட்டா இன்று வரை வழங்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவது பத்திாிகையாளா்களின் வேதனை குரலாக ஓலிக்கிறது. மாவட்ட நிர்வாகம் இதையும் கருத்தில் கொண்டு விரைவாக அதை நிறைவேற்றி கொடுக்க வேண்டும். என்று கேட்டுக்கொள்கின்றனா்.
    
நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்ஏ, மேயர் ஜெகன் பொியசாமி, துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம், பபாசி அமைப்பின் செயலாளர் முருகன், மாவட்ட நூலகா் மீனாட்சி சுந்தாரம், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, நாகராஜன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், வட்டச் செயலாளர்கள் டென்சிங், சுரேஷ், சிங்கராஜ், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி அமைப்பாளர் அண்ணாத்துரை, பகுதி அமைப்பாளர் சுரேஷ்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், கப்பிக்குளம்பாபு, அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் மற்றும் புத்தகம் வாசிப்பாளர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.