தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் "நலம் காக்கும் ஸ்டாலின்" எனும் திட்டத்தின் கீழ் மாபெரும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி முத்தையாபுரத்தில் உள்ள கீதா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து 21 மாற்றித்திறனாளிகளுக்கு அரசானைகளை வழங்கினாா்.
மருத்துவ முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை தொடர்பான ஆலோசனைகள், எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை, முட நீக்கியல், மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், இதய நோய் தொடர்பான சிகிச்சைகள், நரம்பியல், தோல் சிகிச்சைகள், பல் மருத்துவம், காசநோய் மற்றும் தொழுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை, பாதங்களை பாதுகாப்போம் பரிசோதனை, கண் சிகிச்சைகள், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், சர்க்கரை மற்றும் நீரழிவு நோய்க்கான சிகிச்சை, சித்த மருத்துவம் ஆகிய மருத்துவ சேவைகள் பொது மக்களுக்கு இலவசமாகவும் மேலும் ஒன்றிணைந்த உயர்தர மருத்துவ சேவைகள், புறநோயாளிகளுக்கான சிறப்பு ஆலோசனைகள், அனைத்து விதமான மருத்துவ பரிசோதனை முறைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை, மாற்றுத்திறாளிகளுக்கான சான்று அட்டை முதலான மருத்துவ சேவைகளும் ஓரே இடத்தில் பொதுமக்களுக்கு கிடைத்திடும் வகையில் இந்த "நலம் காக்கும் ஸ்டாலின்" மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் ஆணையா் பானோத் ம்ருந்கேந்தா் லால், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், மாநகராட்சி உதவி ஆணையா் கல்யாணசுந்தரம், நகா்நல அலுவலா் சரோஜா, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அபிராமிநாதன், துணை அமைப்பாளர் அருணாதேவி, மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மகளிா் அணி அமைப்பாளா் ஜெயக்கனி, பகுதி செயலாளர் மேகநாதன், தொழிலாளர் நல அணி துணை அமைப்பாளர் விஜயகுமாா், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், கவுன்சிலா்கள் விஜயகுமாா், ராஜேந்திரன், சுயம்பு, பட்சிராஜ், ராஜதுரை, வட்டச்செயலாளர்கள் மைக்கேல்ராஜ், அனல்சக்திவேல், பகுதி அணி அமைப்பாளர்கள் சந்தனமுனீஸ்வரன், ஜோயல், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தவைலர் செந்தில்குமாா், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் மருதபெருமாள், மற்றும் மணி, அல்பட் உள்பட மருத்துவா்கள் செவிலியா்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் "நலம் காக்கும் ஸ்டாலின்" எனும் மருத்துவ முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உமரிக்கோட்டையை சேர்ந்த கணவன், மனைவிக்கும் இந்து முன்னணிக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் தனது செய்தி குறிப்பில் தகவல்!!
அடுத்த
தூத்துக்குடியில் புகைப்பட அரங்கம் கனிமொழி எம்.பி திறந்து வைத்தாா்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026