தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ராஜாவின் கோவில் கிராமத்தில் மழைக்காலங்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு சிரமமாக இருந்த தரைமட்ட பாலத்தை மாற்றி உயர்மட்ட பாலமாக அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டு காலமாக போராடி வந்த நிலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொண்ட முயற்சியின் பலனாக 2 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டு இன்றோடு கட்டிமுடிக்கப்பட்டது.
இன்றைய தினம் (05.05.2025) கட்டிமுடிக்கப்பட்ட உயர்மட்ட பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் எல். ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், பணி மேற்பார்வையாளர் கலையழகன், வருவாய் ஆய்வாளர் ஶ்ரீரங்க பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் ஜாபர் சாதிக், ஊராட்சி செயலர் முத்துராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய துணை செயலாளர் சிவன், வர்த்தகர் அணி முத்துக்குமார், சிறுபான்மை அணி ஞானதுரை, மாணவரணி தங்கதுரை பாண்டியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், பொறியாளர் அணி பார்த்திபன், ராஜாவின் கோவில் கிளை செயலாளர் சிவமுருகன், புதிய முத்தூர் கிளைச் செயலாளர் சற்குணபாண்டியன், ராஜம்மாள், நகர் கிளை செயலாளர் டேவிட், ஞானசேகர், தளவாய் புரம் கிளை செயலாளர் பாலமுருகன், ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி, கழக முன்னோடி பன்னீர்செல்வம் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் - பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்.எல்.ஏ. சண்முகையா திறந்து வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் உயிர்மூச்சு திரைப்படம் தொடர்ந்து 30 வது நாளை கடந்து வெற்றி நடை போடுகிறது!!
அடுத்த
ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கியவர் தவெக தலைவர் விஜய் - வில்லன் நடிகர் உறியடி சங்கர்தாஸ் பேட்டி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026