கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நோயாளிகளையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
விளாத்திகுளம் வட்டம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூக்காண்டி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் சந்தித்த எம்.எல்.ஏ மார்கண்டேயன், மருத்துவர்களிடம் அவருக்கான சிகிச்சை குறித்து கேட்டறிந்து அவருக்கு ஆறுதல் கூறினார். உடன் கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அத்துடன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் கசவன்குன்று பகுதியைச் சேர்ந்த முன்னாள் திமுக கிளைச் செயலாளர் கருப்பசாமியின் மகன் கருப்பசாமி சிகிச்சை பெற்று வருகிறார். அவரையும் எம்.எல்.ஏ சென்று சந்தித்து நலம் விசாரித்து தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் வழங்கப்படுவதாக உறுதி அளித்தார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் ஆகியோர் இணைந்திருந்தனர்.
இருவரும் விரைவில் குணமடைய ஏற்கனவே மருத்துவமனை சார்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்தார்.
தூத்துக்குடி
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இரு நோயாளிகளுக்கு ஆறுதல் அளித்த எம்.எல்.ஏ ஜி.வி. மார்கண்டேயன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி: தொடர்மழை தாக்கம் – மாப்பிளையூரணி பகுதிகளில் ஆய்வு செய்த எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
அடுத்த
கோவில்பட்டியில் தமமுக நிறுவனர் ஜான் பாண்டியன் 70வது பிறந்தநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026