தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேம்பார் மற்றும் பெரியசாமிபுரம் பகுதிகளில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு G.V. மார்கண்டேயன் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, புதிய குடிநீர் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
வேம்பார் ஊராட்சியில் ஆய்வு – பொதுமக்கள் கோரிக்கைகள் கேட்டறிதல்
வேம்பார் ஊராட்சியில் நடைபெற்ற நேரடி ஆய்வின்போது, குடிநீர் வசதி, சாலை மேம்பாடு, வடிகால் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் குறைகளை எம்எல்ஏ அவர்கள் பொறுப்புடன் கேட்டறிந்தார். நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ரஞ்சித், ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, இமானுவேல், அன்புராஜன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தூர் பாண்டியன், ராமலிங்கம், மீனவர் அணி, பொறியாளர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆரோக்கியராஜ், ஜெயந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பெரியசாமிபுரத்தில் 30,000 லிட்டர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி – ரூ.17.43 லட்சம் மதிப்பில் புதிய திட்டம் துவக்கம்
பெரியசாமிபுரம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நிதியின் கீழ் ரூ.17.43 லட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டும் பணியை எம்எல்ஏ திரு. G.V. மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் மேம்படும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, இமானுவேல், அன்புராஜன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தூர்பாண்டியன், ராமலிங்கம், தொழிலாளர் அணி, பொறியாளர் அணி, மீனவரணி நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன், கிளை நிர்வாகிகள் மகிபால், சந்திரசேகர், சரவணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வேம்பாரிலும் பெரியசாமிபுரத்திலும் நடப்புத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து உறுதுணையாக செயல்படுவோம் என எம்எல்ஏ மார்கண்டேயன் உறுதி தெரிவித்தார்.
தூத்துக்குடி
எம்எல்ஏ G.V. மார்கண்டேயன் நேரில் ஆய்வு – பொதுமக்கள் குறை தீர்க்கவும், புதிய நீர்தேக்கத் திட்டத்துக்கும் அடிக்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் எம்பி கனிமொழி கருணாநிதி இரண்டு முக்கிய விளையாட்டு வளாகங்களை திறந்து வைத்தார்!!
அடுத்த
உலக மீனவர் தினத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்ட விழா – தூத்துக்குடி துறைமுகம் உற்சாகம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026